தொடர்புடைய செய்திகள்
- ஒரு சிலிண்டருக்கு ரூ.968 உயர்வு.. வணிக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.3237..! வீட்டு சிலிண்டர் விலை என்ன?
- முடியல!. ஈரானுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை!.. டிரம்ப் விரக்தி!...
- அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு!..
- அமெரிக்காவில் மரண தண்டனைக்கு மீண்டும் துப்பாக்கியால் சுடும் முறை அமல்
- H-1B விசாக்களுக்கு 3 ஆண்டுகள் தடை? அமெரிக்காவில் அறிமுகமான புதிய மசோதாவால் இந்தியர்களுக்கு பாதிப்பு?
ஈரான் போர்!.. இனிமேல் பாகிஸ்தானை நம்ப மாட்டோம்!.. அமெரிக்கா அதிருப்தி!...
ஈரான் அணு ஆயுதம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக்கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார், இதற்கு பழி வாங்கும் விதமாக அமெரிக்கன் ராணுவ தளங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கடல் வழியான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாகவே கேஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்தது.. ஒருபக்கம் பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதேநேரம், பாகிஸ்தான் முன்னெடுத்த அமைதிப்பேச்சுவார்த்தையால் கடந்து பல நாட்களாகவே ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து உடன்பாடு ஏற்படாமல் இருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் விமான தளத்தில் ஈரானிய போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா உறுதி செய்திருக்கிறது. செயற்கைக்கோள் புகைப்படம் மூலம் இது தெரிய வந்திருப்பதாக சொல்லும் அமெரிக்கா, அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் நடுநிலையாளராக செயல்படுவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என அதிருப்தி தெரிவித்திருக்கிறது..