1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. new couple helicopter met with an accident

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து!. புதுமண ஜோடிக்கு நேர்ந்த சோகம்!...

helicopter
விமானம் மற்றும் ஹெலிகாப்டர் உற்பத்தியில் என்னதான் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போனாலும் புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட விமானங்களும், ஹெலிகாப்டர்களும் உருவாக்கப்பட்டாலும், ஒரு பக்கம் விமான விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது.
 
அதை யாராலும் தடுக்க முடியவில்லை. சில சமயம் மோசமான வானிலை நடக்கும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்களை சந்திப்பது அடிக்கடி நடந்து வருகிறது..
 
இந்நிலையில்தான், அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே புதுமண தம்பதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மணமகன் டேவ் பிஜி(25) மற்றும் ஹெலிகாப்டரை இயக்கிய பைலட் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
அதேநேரம் மணமகள் ஜெஸ்னி காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மணமகளை 5 மணி நேர போராட்டத்திற்கு பின் போலீசார் மீட்டிருக்கிறார்கள்.
 
அடுத்த கட்டுரையில்
20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..