1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump warning against iron

கார்க் தீவை முழுமையாக அழிப்போம்!.. அதிபர டிரம்ப் கடும் எச்சரிக்கை!...

donald
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அவர் செய்தியாளர்களை சந்தித்தாலே புதிதாக என்ன குண்டை போட போகிறார் என எல்லோரும் பயப்படும் அளவுக்கு இருக்கிறது அவரின் பேச்சு. வெனிசுலா அதிபரை கைது செய்தார்.. கிரீன்லாந்து எங்களுக்குதான் சொந்தம்.. தேவைப்பட்டால் அந்த நாட்டை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என்றால்.. நோபல் பரிசு எனக்குதான் கொடுக்க வேண்டும் என்றார்.. ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு அதிக வரி என பயமுறுத்தினார்.. இந்தியா மீது 50 சதவீத வரி விதித்தார். அதன்பின் அதை குறைத்தார்.. மீண்டும் உயர்த்தினார்..

ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக சொல்லி அந்த நாட்டின் மீது போர் தொடுத்தார்.. தற்போது ஈரான் நாட்டை இஸ்ரேலும் தாக்கி வருகிறது. ஈரான் நாட்டை கைப்பற்ற நினைக்கும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அதிரடியாக பேசி வருகிறார். ஏற்கனவே ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை நாங்கள் கைப்பற்றுவோம் என சொல்லியிருந்தார். அப்படி கைப்பற்றினால் அது ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதுடன் எரிபொருள் சந்தையில் பெரும் பங்களிப்பை ஏற்படுத்தும் எனவும் பலரும் கூறினார்கள்..

இந்நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.. ஆனால் உடன்பாடு ஏற்படாவிட்டால் அடுத்த சில மணி நேரங்களில் கார்க் தீவை முழுமையாக அளிப்போம் என டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால் அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் மறுத்துள்ளது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு!. தவெக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!..