வரியை குறைச்சாச்சி!. வாங்குன காச திருப்பி கொடுங்க!.. அமெரிக்காவுக்கு நெருக்கடி!...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில மாதங்களாகவே இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வரிகளை அதிகமாக விதித்து வருகிறார். குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தினார். அதுமட்டுமில்லாமல் கூடுதல் வரியாக 25 சதவீத வரியை விதித்தார். எனவே, இந்தியா அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரியை செலுத்தும் நிலை ஏற்பட்டது.
அதேநேரம் சில நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ரி 25 சதவீத கூடுதல் வரியை நீக்கியதோடு இந்தியாவுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைத்தார் டிரம்ப்.
ஆனால், டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல் அவரே தன்னிச்சையாக உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்கிறார்.. இது செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது..
இதையடுத்து, மாற்று வழிகளில் உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்கும் முயற்சியில் டிரம்ப் இறங்கியிருக்கிறார். அதேநேரம் நீதிமன்றம் சொல்லிவிட்டதால் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளுக்கு 18 சதவீத வரியை 10 சதவீதமாக குறைத்து நேற்று மசோதாவில் கையெழுத்திட்டார்.
ஒருபக்கம், உலக நாடுகள் மீதான ட்ரம்பின் அதித வரி விதிப்பை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல மில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கிறது. அதிக வரிவிதிப்பால் மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ், கலிபோர்னியா, நியுயார்க் ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.