1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china sun chasing plan is success

விண்வெளியிலிருந்து வயர்லெஸ் மூலம் மின்சாரத்தை பூமிக்கு கடத்தி சோதனை!.. சீனா வெற்றி!...

china
உலகத்திலேயே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் சீனா முதலிடத்தில் இருக்கிறது. சீனாவின் கண்டுபிடிப்புகள்தான் தற்போது இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விளையாட்டு பொம்மை முதல் கொண்டு செல்போன் வரை சீனா உற்பத்தி செய்யாத பொருட்களே இல்லை என்று சொல்லலாம்.

கடலின் மேல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு பாலம் அமைப்பது உள்ளிட்ட பல தொழில்நுட்பம் மூலம் உலகை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டே இருக்கிறது சீனா. சில மாதங்களுக்கு முன்பு சொந்தமாக சூரியனையே உருவாக்கும் முயற்சியில் சீனா இறங்கியது. இந்நிலையில் விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து மின்சாரத்தை வயர்லெஸ் மூலம் பூமிக்கு கடத்தும் சீனாவில் SUN CHASING திட்டத்தின் தரைவழி சோதனை தற்போது வெற்றி பெற்றிருக்கிறது..

75 மீட்டர் கோபுரத்திலிருந்து 4.8 மீட்டர் குவிமாட கண்ணாடி மூலம் சூரிய ஒளியை ஈர்த்து அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் கடத்தி சீனா சாதனை செய்திருக்கிறது. சீனா செய்துள்ள இந்த சாதனை உலக அளவில் பேசுபொருளாகப் மாறியிருக்கிறது.
அடுத்த கட்டுரையில்
தியேட்டரில் பெண் மரணம்!.. அல்லு அர்ஜூன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!..