இந்தியா கேட்டை விட அழகா ஒன்னு கட்டப்போறேன்!. தம்மட்டம் அடிக்கும் டொனால்ட் டிரம்ப்!..
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீப காலமாகவே வரிகளை உயர்த்துவேன் என பல நாடுகளையும் மிரட்டி வருகிறார்.. அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் அதிகப்படியான வரி விதிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்.. நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது இந்திய பிரதமர் மோடிக்கு தெரியும்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவிற்கு 500 சதவீதம் வரி விதிப்பேன் என சொல்லி அது தொடர்பான மசோதாவிலும் கையெழுத்து போட்டார்.
ஒருபக்கம் இந்தியாவும் அமெரிக்காவுக்கு அதிக வரியை விதித்தது.. ஒருவழியாக இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து இந்த பிரச்சனை சுமூக முடிவுக்கு வந்திருக்கிறது..
இந்திய மீதான வரியை 25 சதவீதத்திலிருந்து 18 ஆக குறைக்கப்படும் என டிரம்ப் நேற்று அறிவித்தார்.. அதேபோல் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது இந்தியா நிறுத்தி விடுவதாக எங்களிடம் சொல்லியி இருக்கிறது.. மேலும் 500 பில்லியன் டாலருக்கு அமெரிக்க பொருட்களை வாங்குவதாக இந்தியாவும் சொல்லியிருக்கிறது என்றெல்லாம் கூறியிருந்தார்..
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் டெல்லியில் உள்ள இந்தியா கேட் புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப் இந்தியாவின் அழகான வெற்றி வளைவு.. நம்முடையது இதையெல்லாம் விட சிறப்பானதாக இருக்கும் என பதிவிட்டிருக்கிறார்..அமெரிக்காவின் 250 சுதந்திர தினத்தை ஒட்டி வாஷிங்டனில் பிரம்மாண்டமான வெற்றி விளைவு கட்டப்படும் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது..