கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி!.. வரி விதிப்பேன்!.. மிரட்டும் டிரம்ப்!...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களாகவே பல நாடுகளுக்கும் அதிகமான வரிகளை விதித்து மிரட்டி வருகிறார். ஏற்கனவே ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு 500 சதவீத வரி விதிப்பேன் என மிரட்டினார். அதேபோல் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அதிக வரிகளை விதித்தார். அதிலும், சீனாவுக்கு அதிக அளவில் வரிகளை விதித்து விதித்து விளையாடினார்.
இந்நிலையில் கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு அதிக வரி விதிப்பேன் என டிரம்ப் மிரட்டியிருக்கிறார். ஏற்கனவே அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேநேரம் கியூபாவுக்கு வெனிசுலா, மெக்சிகோ போன்ற நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. ஆனால் சமீபத்தில் வெனிசுலா அதிபரை அமெரிக்கா கைது செய்தது. இதனால், வெனிசுலாவிலிருந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது தடைபட்டிருக்கிறது.
கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் மீது வரி விதிப்பேன் அமெரிக்க அதிபர் டொனால்ட் மிரட்டியிருக்கிறார். அவரின் மிரட்டலை தொடர்ந்து கியூபாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை மெக்சிகோ நாடு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.