1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. Arjuna Ranadhunga arrested in Srilanka

ரணில் ஆதரவாளர் ரணதுங்கா கைது! இலங்கையில் பதட்டம்

அர்ஜூனா ரணதுங்கா
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, ராஜபக்சேவை புதிய பிரதமராக மாற்றிய அதிபர் சிறிசேனா, தற்போது ரணில் ஆதரவாளரும், முன்னாள் பெட்ரோலிய துறை அமைச்சரும், முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாகிய அர்ஜூனா ரணதுங்காவை கைது செய்துள்ளார். இதனால் இலங்கையில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த அர்ஜுன ரணதுங்க நேற்று தலைநகர் கொழும்பு நகரில்ல் உள்ள பெட்ரோலிய துறையின் தலைமையகத்துக்கு சென்றார். ஆனால் அவர் உள்ளே நுழைய அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்து கரகோஷம் எழுப்பிதால் பதட்டநிலை ஏற்பட்டது. இதனையடுத்து நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார், இரண்டு பேர் காயமடைந்தனர்

இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அர்ஜுன் ரணதுங்காதான் காரணம் என கூறி அவரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்தனர். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஞாயிற்றுக்கிழமை வரும் தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி: சோகத்தில் ஊழியர்கள்