வியாழன், 2 அக்டோபர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (13:30 IST)

பினராயி விஜயன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்: 1400 பேர் கைது; 2000 பேருக்கு செக்

பினராயி விஜயன் ரொம்ப ஸ்ட்ரிக்ட்: 1400 பேர் கைது; 2000 பேருக்கு செக்
கடந்த வாரம் சபரிமலை விவகாரம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் அதன் விலைவாக ஒரே நாளில் 1400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கேரள அரசின் உத்தரவுபடி சுமார் 1400 பேரை கைது செய்துள்ளனர். இதில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடக்கம். 
 
இதோடு நிறுத்தாமல், மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இதை எதிர்த்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.