செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 அக்டோபர் 2018 (09:40 IST)

அப்பாவி மக்களை கைது செய்வதா.. அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சபரிமலை விவகாரத்தில் அப்பாவி மக்களை கைது செய்யும் கேரள அரசுக்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களூம் செல்லாம் என உத்தரவு பிறக்கப்பட்டதை அடுத்து பெண் செய்தியாளர்கள், பெண்ணியவாதிகள் அங்கு செல்ல முற்பட்டனர். இதனால் அங்கு பிரச்சனை ஏற்பட்டு அந்த பெண்கள் திருப்பி அனுப்பட்டனர். 
 
அப்போது நடந்த வன்முறை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், கேரள அரசின் உத்தரவுபடி சுமார் 1400 பேரை கைது செய்துள்ளனர். இதில், ஐயப்ப பக்தர்கள் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் அடக்கம். 
 
இதோடு நிறுத்தாமல், மேலும் 2 ஆயிரம் பேரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதில் பல அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டாவை சேர்ந்த சுரேஷ் ராஜ், அனோஜ் ராஜ் என்பவர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் வீண் விளம்பரத்திற்காக அரசு அப்பாவி மக்களை கைது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது. மேலும் கைது செய்யப்பட்டோர் சம்மந்தமான விளக்கத்தை 29-ந்தேதி சமர்ப்பிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.