வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (14:20 IST)

ஈரானுடன் போர்!.. ஒரு நாளுக்கு இவ்வளவு ஆயிரம் கோடி செலவா?. தலையே சுத்துதே!..

donald
ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சொல்லி அந்நாட்டின் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த சில நாட்களாகவே தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதமடைந்திருக்கிறது. மேலும், ஈரானை சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் போருக்கு பலியாகிவிட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..

இதன் காரணமாக உலக நாடுகள் கலக்கமடைந்திருக்கின்றன. ஏனெனில், இது மூன்றாவது உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ என்கிற அச்சம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஒருபக்கம், வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஒருபக்கம், இந்த போரால் ஈரான், இஸ்ரேல், அமெரிக்க ஆகிய நாடுகள் பல கோடிகளை செலவு செய்து வருகிறது..அதிலும் ஈரான் மீது தாக்குதல் நடந்த முதல் 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்கா 7,183 கோடி செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.. போரில் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இடமாற்றம் செய்யவே இவ்வளவு ஆயிரம் கோடி செலவானதாக சொல்லப்படுகிறது.