ஈரானில் போர்..இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொடுக்க நாங்க ரெடி!.. ரஷ்யா அறிவிப்பு....
ஈரான் அரசு அணு ஆயுதங்களை வைத்திருக்ககூடாது என அமெரிக்காவும், இஸ்ரேலும் நினைக்கிறது. எனவே, இது தொடர்பாக சில நாட்கள் ஈரான் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. அதையடுத்து, ஈரான் நாட்டின் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் கடந்த சில நாட்களாகவே தாக்குதலை நடத்தி வருகின்றன.
இதில் ஈரானின் பல பகுதிகள் சேதமடைந்திருக்கிறது.. குறிப்பாக ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது.. இதுவரை அங்கு 600க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ராணுவத்தளங்கள் அமைந்திருக்கும் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
ஒருபக்கம் இந்த போரால் இந்தியா பாதிக்கப்படும் என சிலர் சொன்னார்கள். அதாவது, மத்திய கிழக்கில் போர் மூண்டால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கிடைக்காமல் போகும். அதனால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரும்.. கேஸ் தட்டுப்பாடு ஏற்படும்.. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயரும் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவித்திருக்கிறது. மேலும், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்திருக்கிறது.