1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trump said he stopped india pakistan war

நான் மட்டும் போரை நிறுத்தலனா பாகிஸ்தான் அதிபர் இறந்துபோயிருப்பார்!.. டிரம்ப் பேச்சு...

donald
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்தது முதலில் பல அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருவதோடு, பரபரப்பான கருத்துக்களையும் தொடர்ந்து கூறி வருகிறார். ஒரு பக்கம் உலக நாடுகளுக்கு அதிகப்படியான வரிகளையும் விதித்து வருகிறார்.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்தார். அதன்பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அது 18 சதவீதமாக குறைந்தது. அதன்பின்  அமெரிக்க உச்சநீதிமன்றம் அதற்கு கண்டனம் தெரிவித்ததால் உலக நாடுகளுக்கான வரியை 10 சதவீதமாக குறைத்தார். அதன்பின் திடீரென 15 சதவீதமாக உயர்த்தினார். இப்படி வரி விவகாரத்தில் நிலை இல்லாத நிலை நீடித்து வருகிறது...

ஒருபக்கம் ‘நான் பல நாடுகளின் போர்களை நிறுத்தியிருக்கிறேன். எனவே எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும்’ என்றும் தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. அதேபோல் காஷ்மீரில் தீவிர தாக்குதலுக்கு பின் நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரையும் நான்தான் தடுத்து நிறுத்தினேன் என தொடர்ந்து சொல்லி வருகிறார் டிரம்ப்.

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய  டிரம்ப் ‘எனது தலையீடு இல்லையென்றால் இந்தியாவுடனான போரில் பாகிஸ்தான் பிரதமர் உயிரிழந்திருப்பார் என அந்நாட்டு மக்களே சொன்னார்கள்.. இந்தியா -  பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் வெடித்திருக்கும்.. அதை நான் தடுத்து நிறுத்தினேன்’ என கூறியிருக்கிறார்..
அடுத்த கட்டுரையில்
பனையூர் வர நான் ரெடி.. அவங்கள விட்டுருங்க.. விஜய்க்கு சவால் விட்ட ஜூலி