உக்ரைன் போர் விவகாரம்: ரஷ்யாவில் திடீரென 800 பேர் கைது!
உக்ரைன் போர் விவகாரம்: ரஷ்யாவில் திடீரென 800 பேர் கைது!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து அந்நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென ரஷ்யாவில் 800 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
ரஷ்யாவில் உள்ள தலைநகர் மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உள்ளிட்ட இடங்களில் புதினுக்கு எதிராக கோஷம் எழுப்பிய மக்கள் , உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட 800 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் போராட்டங்களில் ஈடுபடும் ரசிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்ததோடு உக்ரைனில் ரஷ்ய மக்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை தடுக்கவே ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதாக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார் .