1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Anandakumar
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (22:05 IST)

பிரபல ரவுடி பேபி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவு

சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகளை வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட டிக் டாக் பிரபல ரவுடி பேபி சூர்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
 
 
மதுரையை சேர்ந்த சூர்யா (எ) சுப்புலட்சுமி, 'ரவுடி பேபி' என்ற பெயரில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதேபோல, மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சிக்கந்தர் ஷா, 49, என்பவரும் வீடியோ பதிவிட்டு வந்தார். ஆபாசமாக பேசியும், ஆடியும் அவர்கள் வெளியிட்ட வீடியோக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இவர்கள் மீது கோவையை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த கோவை சைபர் கிரைம் போலீசார், இணையதளங்களில் ஆபாசமாக பேசியதாக கடந்த ஜனவரி மாதம் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சிக்கந்தர் ஷா மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சமீரன் சமீரன் உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள அவரிடம் இன்று வழங்கப்பட்டது.