முதல் நாள் போரில் 137 பேர் பலி: தனித்து விடப்பட்டதாக உக்ரைன் அதிபர் வருத்தம்!
ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என உக்ரைன் அதிபர் தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாள்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்று திடீரென அவருக்கு ரஷ்ய அதிபர் புதின் ஆணையிட்டார்
இதனையடுத்து உக்ரைன் மீது இராணுவ படைகள் கொடூரமான தாக்குதலை செய்து வருகிறது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் முதல் நாளில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்
மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்படும் என்றும் எங்களுக்கு உதவி செய்ய எந்த நாடும் முன்வரவில்லை என்றும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது