செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (07:24 IST)

உக்ரைனை சேர்ந்த ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை: அதிபர் உத்தரவு

உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டு அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது என்பதும் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு நகரங்களில் குண்டு மழை பொழிந்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்தநிலையில் உக்ரைன் நாட்டு ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டு ஆண்கள் எல்லோரும் போருக்கு தயாராக வேண்டும் என்றும் போருக்கு தயார் என்று கூறும் கூறி யார் வந்தாலும் அவர்களுக்கு ஆயுதம் வழங்க படும் என்றும் உக்ரைன் அதிபர் கூறியிருந்தார்.
 
 இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 18 முதல் 60 வயது வரை ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை என அந்நாட்டின் அதிபர் திடீர் என உத்தரவு பிறப்பித்துள்ளார்
 
தலைநகர் கீவ் நகரில் உள்ள மக்களுக்கு பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன