வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 மார்ச் 2026 (16:05 IST)

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?

10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு! மத்திய கிழக்கில் போர் பதற்றம் காரணமா?
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண போர்ச்சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், அங்கு நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வாரியம் ஒத்திவைத்துள்ளது. 
 
மார்ச் 2, 2026 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், இதற்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஈரான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள தேர்வு மையங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். முன்னதாக, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பரவிய போலி அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என மாணவர்களை வாரியம் எச்சரித்துள்ளது.
 
மார்ச் 3-ஆம் தேதி நிலைமையை மீண்டும் ஆய்வு செய்த பிறகு, மார்ச் 5-ஆம் தேதி முதல் திட்டமிடப்பட்டுள்ள தேர்வுகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வளைகுடா நாடுகளில் நிலவும் வான்வழி தாக்குதல் அச்சம் மற்றும் விமான போக்குவரத்து முடக்கம் காரணமாக இந்த தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் சுமார் 43 லட்சம் மாணவர்கள் இவ்வாண்டு பொதுத்தேர்வு எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva