திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:30 IST)

உக்ரைன் நாட்டு தலைநகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு

உக்ரைன் நாட்டு தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியது.

இதையடுத்து, பிரதமர் மோடி ரஷ்ய அதிபரிடம் போனில் பேசினார். பிரிட்டன் பிரதமர் மோரிஸ் ஜான்சன் இது காட்டுமிரான்டித்தனமான தாக்குதல் என விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைனுகுள் நுழைந்து ரஷ்ய படை  தாக்குதல் நடத்தி வருவதால்  தலை நகர் கிவ்வின் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் நகரில்  இந்திய தூதரகம் அருகில்  பள்ளி மாணவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.