தொடர்புடைய செய்திகள்
- ஐரோப்பாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான் வைரஸ்; கிழக்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கை!
- இங்கிலாந்தில் 2 பேர்களுக்கு ஒமைக்ரான் கொரோனா: மீண்டும் ஊரடங்கா?
- ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் பரவுவதைத் தடுக்க வேண்டும்… அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
- உருமாறிய ஒமிக்ரான் கொரொனா பரவலை தடுக்க .அதிகாரிகளுக்கு பிரமர் மோடி அறிவுறுத்தல்!
- தென்னாப்பிரிக்கா வைரஸ்க்கு புதிய பெயர்: உலக சுகாதார மையம்!
61 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: அதிர்ச்சியில் நெதர்லாந்து அரசு!
நெதர்லாந்து நாட்டில் 61 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அந்நாட்டு அரசு பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தற்போது ஒமிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த வைரஸ் மனித குலத்திற்கே பெரும் சவாலாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்த வைரஸ் பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இரண்டு விமானங்களில் வந்த 66 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து அரசு தெரிவித்துள்ளது
இதனை அடுத்து அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அந்நாட்டு சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
