வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 27 நவம்பர் 2021 (07:37 IST)

தென்னாப்பிரிக்கா வைரஸ்க்கு புதிய பெயர்: உலக சுகாதார மையம்!

தென்னாபிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வைரஸ் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் பயங்கரமானது என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இதனால் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு அனுமதி இல்லை என ஒரு சில நாடுகள் அறிவித்துள்ளன என்பதும் இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை ஒமிக்ரான் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை கண்டறியப்பட்ட இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது