உருமாறிய ஒமிக்ரான் கொரொனா பரவலை தடுக்க .அதிகாரிகளுக்கு பிரமர் மோடி அறிவுறுத்தல்!
உருமாறிய ஒமிக்ரான் கொரொனா பரவலைத்தடுக்க கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது. இதுவரை கண்டறியப்பட்டதில் இதுவே வீரியமிக்க கொரோனா வகை என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உருமாறிய ஒமிக்ரான் கொரொனா பரவலைத்தடுக்க கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: உருமாறிய கொரொனா கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணிக்க வேண்டும். கொரோனா தடுக்க மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.