1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (07:51 IST)

இங்கிலாந்தில் 2 பேர்களுக்கு ஒமைக்ரான் கொரோனா: மீண்டும் ஊரடங்கா?

இங்கிலாந்து நாட்டில் இரண்டு பேர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் தீவிரமாக பட்டு வருவதாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் கடந்த சில நாட்களாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் மனிதனுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் உயிரை போகும் அளவிற்கு வீரியமானது என்றும் விஞ்ஞானிகள் மருத்துவர்கள் கூறி வருகின்றனர். 
 
இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டில் நேற்று இரண்டு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த இரண்டு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு வருவதாகவும் ஒரு சில நாடுகளில் விரைவில் ஊரடங்கு உத்தரவு குறித்து அறிவிப்பு வெளிவரும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.