1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 நவம்பர் 2021 (10:17 IST)

குஷ்பு இட்லி கேட்டவருக்கு தவளை இட்லி: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!

குஷ்பு இட்லி கேட்டவருக்கு தவளை இட்லி: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்!
கும்பகோணத்தில் உள்ள தனியார் உணவகத்தில் குஷ்பு போல் பஞ்சு மாதிரி இட்லி கேட்ட ஒருவருக்கு தவளை இட்லியை ஓட்டல் நிர்வாகம் பரிமாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனை அருகே தனியார் உணவகம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட இட்லியில் தவளை இறந்து கிடந்ததை பார்த்து வாடிக்கையாளர் பெரும் அதிர்ச்சி அடைந்தார் 
 
இட்லியுடன் தவளை இருந்த வீடியோவை எடுத்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவின் அடிப்படையில் உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது