புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 3 மார்ச் 2022 (08:04 IST)

உக்ரைனின் வெறித்தனமான தாக்குதல்: 500 ரஷ்ய வீரர்கள் பலி!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த ஒரு வாரமாக கடுமையான தாக்குதல் நடத்தி வருவதால் போர் தற்போது உச்சத்தில் உள்ளது. இந்த போரில் உக்ரைனை சேர்ந்த பொதுமக்கள் உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து விட்டதாகவும் இந்த உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் தாய் நாட்டை காப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தீவிரமாக வெறித்தனமாக போரிட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் ரஷ்யா தற்போது முதல் முறையாக தங்களுடைய நாட்டின் வீரர்கள் 500 பேர் போரில் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளது. உக்ரைன் ராணுவ வீரர்களின் வெறித்தனமான தாக்குதலில் 500 வீரர்கள் ரஷ்யாவில் பலியாகி இருப்பது அந்நாட்டு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது