திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (11:42 IST)

டாஸ்மாக் ஊழல்: போராட்டம் நடத்த சென்ற அண்ணாமலை கைது! - சென்னையில் பரபரப்பு!

annamalai arrest

டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் அமலாக்கத்துறை டாஸ்மாக் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடத்திய ரெய்டில் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டத்தை பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் வீடுகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து கண்டனம் தெரிவித்த பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக காரில் கானத்தூரில் உள்ள தன் வீட்டிலிருந்து எழும்பூர் நோக்கி புறப்பட்டு சென்றார். அப்போது அவரை பாதி வழியில் வழிமைத்த காவல்துறையினர் அக்கரை பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர்.

 

பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K