தொடர்புடைய செய்திகள்
- நேற்று உச்சத்திற்கு சென்ற தங்கம்.. இன்று சற்று குறைவு.. சென்னை நிலவரம் என்ன?
- இன்று ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் விலை ரூ.66,400..!
- இன்று ஒரே நாளில் சுமார் 880 ரூபாய் தங்கம் விலை உயர்வு.. 66 ஆயிரத்தை நெருங்கியது ஒரு சவரன்..!
- மீண்டும் உச்சம் சென்ற தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 440 ரூபாய் உயர்வு..!
- மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது..!
சற்று குறைந்தது தங்கம் விலை.. ஆனாலும் ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தை நெருங்கி வருவதால் அதிர்ச்சி..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில், ஒரு சவரன் 66 ஆயிரம் ரூபாயை நெருங்கியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு வெறும் 10 ரூபாய், ஒரு சவரனுக்கு 80 ரூபாய் மட்டும் குறைந்துள்ளது. இருப்பினும், 66 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டே இருப்பதால், தங்கம் வாங்குபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 8,210 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 80 குறைந்து ரூபாய் 65,680 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,956 எனவும் ஒரு சவரன் ரூபாய் 71,648 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 113.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 113,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
