சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவு
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக எம்எல்ஏக்கள் முடிவெடுத்துள்ளனர். இந்த சூழலில், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது.
சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பேரவையில் விவாதிக்க, ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சபாநாயகரை நீக்க வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் ஆர்.வி. உதயகுமாரின் முன்மொழிவுக்கு வெற்றி பெற 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
தீர்மானத்தை விவாதிக்க எடுத்துக்கொள்ள, செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்த, பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியை சபாநாயகர் அப்பாவு அழைத்துள்ளார். இந்த நிலையில் பாஜக மற்றும் பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லாமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் சில நிமிடங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்பாவுக்கு எதிராக அதிக வாக்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran