1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 2 மார்ச் 2022 (19:25 IST)

உக்ரைனில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்: நடந்தே சென்று தப்பித்ததாக தகவல்!

உக்ரைனில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்: நடந்தே சென்று தப்பித்ததாக தகவல்!
உக்ரைனில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் எந்தவிதமான வாகனமும் கிடைக்காததால் நடந்தே சென்று உக்ரைனில் இருந்து தப்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ஹாலிவுட் நடிகர் ஷான்பென் சமீபத்தில் உக்ரைனுக்கு சென்றபோது திடீரென போர் ஆரம்பித்து விட்டதால் அவரால் உக்ரைனில் இருந்து வெளியேற முடியவில்லை
 
இதனை அடுத்து கார் பேருந்து என எந்த வாகனமும் கிடைக்காததால் நண்பர் ஒருவரின் காரில் சில தூரம் சென்று, அதன் பின்னர் நடந்தே போலந்து நாட்டுக்கு வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது அவர் சாலையில் நடந்து செல்லும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது