வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (18:53 IST)

என் மகன் 97% மதிப்பெண் பெற்றவர்: உக்ரைனில் உயிரிழந்த மாணவரின் தந்தை

எனது மகன் பள்ளியில் 97 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தவர் என உக்ரைனில் பலியான மாணவன் நவீனின் தந்தை தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் உக்ரைன் நாட்டில் மருத்துவம் படிக்க கர்நாடகாவைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் குண்டுவெடிப்பில் பலியானார். இந்த நிலையில் இந்தியாவில் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் தான் வெளிநாடுகள் சென்று மருத்துவம் பார்க்கிறார்கள் என மத்திய அமைச்சர் ஜோஷி தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் மறைந்த மாணவரின் தந்தை இது குறித்து கூறியபோது எனது மகன் நவீன் 97 சதவீத மதிப்பெண் பெற்று இருந்தார் என்றும் ஆனால் அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கவில்லை என்றும் இந்தியாவில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பதற்கு கோடிக் கணக்கில் நன்கொடை கேட்கிறார்கள் என்றும் அதனால்தான் உக்ரைன் சென்று படிக்க வைத்தோம் என்று கூறியிருந்தார்.