1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 2 மார்ச் 2022 (18:46 IST)

கச்சா எண்ணெய் வரலாறு காணாத வகையில் உயர்வு!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இன்று காலை நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து 112 டாலராக உயர்ந்துள்ளதாகவும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்திலிருக்கும் ரஷ்யாவில் இருந்து வரக்கூடிய பெருமளவிலான கச்சா எண்ணெய் முடங்கி உள்ளதால் தான் இந்த விலை ஏற்றம் என்றும் கூறப்படுகிறது
 
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டதால் அதன் விலை உயர்ந்துள்ளதால் உலகம் முழுவதும் பெட்ரோல் விலை மிகப்பெரிய அளவில் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இந்தியாவில் மார்ச் 8ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 10 ரூபாய் உயரும் என்று கூறப்படுகிறது