திங்கள், 17 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 மார்ச் 2025 (12:37 IST)

வெறும் 4 டாலர்தானா? சுனிதா வில்லியம்ஸுக்கு இவ்வளவுதான் சம்பளமா?

Sunita Williams.

விண்வெளியில் சிக்கி தவித்து வந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு அழைத்து வரப்படும் நிலையில் அவருக்கு அளிக்கப்பட உள்ள சம்பளம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசாவிற்காக பலமுறை விண்வெளி பயணம் மேற்கொண்டவர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் 10 நாட்கள் ஆய்வு பணிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கித் தவித்து வந்தனர்.

 

இந்நிலையில் அவர்களை மீட்க அனுப்பப்பட்ட சிறப்பு குழுவினர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்துள்ள நிலையில், நாளை அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்பட உள்ளனர். விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் ஆண்டுக்கு ரூ.1.41 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

 

மேலும் தற்போது அவர் விண்வெளியில் 287 நாட்கள் தங்கியிருந்த நிலையில் நாள் ஒன்றுக்கு 4 டாலர்கள் வீதம் (இந்திய மதிப்பில் சுமார் 320 ரூபாய்) என மொத்தம் 1,148 டாலர்கள் (சுமார் 1 லட்ச ரூபாய்) வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வளவு நாள் உயிரை பணயம் வைத்து விண்வெளியில் இருந்தவருக்கு இவ்வளவுதான் சம்பளமா என்ற பேச்சு சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K