1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. 45 Nigerian people killed by thieves

45 பேரைக் கொன்று கால்நடைகளை திருடிய கும்பல்

நைஜீரியா
நைஜீரியாவில் ஒரு மனித மிருக கும்பல் பெண்கள், குழந்தைகள் என 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று கால்நடைகளை திருடிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் பெரும்பாலானோர், மனசாட்சி இல்லாதவர்களாய் தான் இருக்கிறார்கள். பணத்திற்காகவும், நகைக்காகவும் சில மனித மிருகங்கள், ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் அளவிற்கு செல்கிறார்கள்.
 
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்,  ப்ரின் க்வாரி என்ற கிராமத்தில் புகுந்த ஒரு கும்பல் பெண்கள், குழந்தைகள் உள்பட 45 பேரை ஈவு இரக்கமின்றி கொன்று அங்கிருந்த கால்நடைகளை திருடிச்சென்றுள்ளனர்.
 
பலியான குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, கொள்ளையர்கள் விரைவில் கூண்டோடு அழிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளது. பணத்திற்காக 45 உயிர்களை கொல்லப்பட்ட சம்பவம் பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நீட் எனும் அரக்கன் கேட்ட உயிர் பலி...