1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 5 மே 2018 (13:47 IST)

பெண்களுடன் உல்லாசம் - காவலரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்

புகார் கொடுக்க வரும் பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்த விவகாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் சீர்மிகு காவல் நிலையத்தில் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நடராஜன். குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்திற்கு வரும் பெண்களுக்கு வலை விரித்து, அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து சென்று நடராஜன் உல்லாசம் அனுபவித்துள்ளார். அவரது குடும்பம் செங்கோட்டையில் தனியாக வசிப்பது அவருக்கு வசதியாக இருந்துள்ளது.
 
இவரின் காம விளையாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், அவரை கையும் களவுமாக பிடிக்க அவரின் வீட்டின் அருகே வசித்து வந்த பொதுமக்கள் காத்திருந்தனர். 
 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குடும்ப பிரச்சனை காரணமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு நடராஜன் வலை விரித்துள்ளார். அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசி, வழக்கம் போல் தனது வலையில் வீழ்த்தி, அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். 
 
எனவே, 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். அவர் கதவை திறந்தவுடன் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது, அரைகுறை ஆடையுடன் அவர் இருக்க, அப்பெண்ணே நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். இதைக்கண்டு கொதிப்படைந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் தப்பிக்காத வண்ணம் மடக்கிப்பிடித்து வீட்டிற்குள் அமர வைத்தனர். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவும் எடுத்தனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. 
 
அதன்பின் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, இருவரையும் அவர்களிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். ஏட்டு நடராஜன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
ஏட்டு நடராஜனின் செயல் நெல்லை போலீசார் வட்டத்தில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.