வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (15:54 IST)

கள்ளக்காதல் விவகாரம் ; வாலிபர் வெட்டிக்கொலை : கூலிப்படையினரை பிடித்த பொதுமக்கள்

திருமணமான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர் கூலிப்படையினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் விழுப்புரம் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
விழுப்புரம் மாவட்டம் உடையநாச்சி கிராமத்தில் வசிப்பவர் அன்பழகன். அவர் விஜயா என்கிற பெண்ணை 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில வருடங்களாக அன்பழகன் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்துள்ளர்.
 
அப்போது, அவரது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த மணிவேல் என்கிற வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் இருக்கும் விவகாரத்தை, தனது நண்பரகள் மூலம் தெரிந்து கொண்டார். எனவே, விஜயாவையும், மணிவேலையும் எச்சரித்துள்ளார். ஆனாலும், அவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்ததாக தெரிகிறது.
 
எனவே, மணிவேலை கொலை செய்ய திட்டமிட்ட அன்பழகன், நெய்வேலியில் கூலிப்படை நடத்தும் வீரமணியை தொடர்பு கொண்டு, மணிவேலை கொலை செய்ய வேண்டும் எனக்கேட்டுள்ளார். ரூ.10 லட்சம் பேரம் பேசப்பட்டு முன்பணத்தையும் கொடுத்துள்ளார்.
 
அதனையடுத்து, விழுப்புரம் வந்த கூலிப்படையினர், புது உச்சிமேடு கிராமம் செல்லும் சாலையில் தனியாக நடந்து சென்ற மணிவேலை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். இதைக்கண்டு அலறியடித்து மணிவேல், அருகிலுள்ள மக்காச்சோள தோட்டத்திற்குள் ஓடியுள்ளார். அவரை விரட்டி சென்ற கூலிப்படையினர் அங்கேயே அவரை வெட்டி கொலை செய்துள்ளனர்.
 
மணிவேலின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அரிவாளை காட்டி அவர்களை மிரட்டிய கூலிப்படையினர் அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனாலும், 3 பேரை மட்டும் பொதுமக்கள் மடக்கிப்பிடித்து மரத்தில் கட்டி கட்டையால் அடித்தனர். 
 
தகவலிறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்கள்  மூவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், தலைமறைவான கூலிப்படை தலைவன் வீரமணியை வலை வீசி தேடி வருகின்றனர்.