1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 7 மே 2018 (11:27 IST)

சொந்த ஊர் வந்தது கிருஷ்ணசாமியின் உடல்: உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுத சென்ற மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் சென்ற தந்தை கிருஷ்ணசாமி, நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்குக் பின்னர் இன்று அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது.
 
கேரள எல்லை வரை கிருஷ்ணசாமியின் உடலை கொண்டு வந்த கேரள போலீசார் பின்னர் தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணசாமியின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர்களும், உறவினர்களும் அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 
நீட் தேர்வை வெளிமாநிலம் சென்று மகன் எழுதவுள்ளதால் கிருஷ்ணசாமி கட்ந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், இந்த நிலையில் தான் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கிருஷ்ணசாமியின் உடலுக்கு அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.