தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்று 4,879 பேருக்கு கொரோனா உறுதி! 62 பேர் பலி
- டாஸ்மாக்கில் கடன் கேட்ட குடிமகன் – தராததால் செயத செயல்!
- ட்ரம்புக்காக பட்டினி கிடந்த விவசாயி மரணம் – அதிர்ச்சி செய்தி!
- பத்ரி படத்தில் சிறுத்தை சிவாவா? விஜய்யுடன் சேர்ந்து செய்யும் லூட்டி!
- பிளாஸ்டிக்கில் தன்னீர் டேங்க் வைக்க 7.50 லட்சமா? வைரலான புகைப்படம்!
உலக கொரோனா: பாதிப்பு 3.80 கோடி, குணமானோர் 2.85 கோடி
உலகில் கொரோனா தொற்றால் 3,80,29,217 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 10,85,092 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
மேலும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையிலும் உலகில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 2,85,87,898 பேர் மீண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகில் கொரோனா பாதிப்புடன் 83,56,227 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
உலகில் நேற்று மிகஅதிகபட்சமாக இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதேபோல் உலகில் நேற்று அதிகபட்சமாக இந்தியாவில் 710 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45,759 என்றும்,
இங்கிலாந்தில் நேற்று 13972 பேருக்கும், ரஷ்யாவில் 13592 பேருக்கும் பாதிப்பு என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் அர்ஜெண்டினாவில் 318 பேரும், இங்கிலாந்தில் 316 பேரும் ஈரானில் 272 பேரும், பிரேசிலில் 203 பேரும் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
