செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (16:39 IST)

டாஸ்மாக்கில் கடன் கேட்ட குடிமகன் – தராததால் செயத செயல்!

மதுரை அருகே அலங்கநல்லூர் பகுதியில் கடனுக்கு சரக்குக் கேட்டதற்கு கொடுக்காததால் பாட்டிலால் தாக்கியுள்ளார் ஒரு நபர்.

அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக சக்கரவர்த்தி.நேற்று மாலை 4 மணியளவில் கடைக்கு வந்த  பிரதீப்ராஜா என்பவர் கடனுக்கு சரக்குக் கேட்டுள்ளார். அதற்கு சக்கரவர்த்தி மறுக்கவே பிரதீப் ராஜா அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.

இந்த தகராறில் பிரதீப் காலி பாட்டிலால் சக்ரவர்த்தியின் மண்டையில் தாக்கிவிட்டு மது பாட்டில்களையும் பணத்தையும் திருடிச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து காயமடைந்த சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.