புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (16:39 IST)

ட்ரம்புக்காக பட்டினி கிடந்த விவசாயி மரணம் – அதிர்ச்சி செய்தி!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்கு குணமாக வேண்டுமென வேண்டிக்கொண்டு உண்ணாவிரதம் மேற்கொண்ட விவசாயி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தீவிர பகதராக இருந்தவர் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விவசாயியான கிருஷ்ணா ராஜு. ட்ரம்ப்புக்கு ஆறடி  சிலை அமைத்து, தினமும் பூஜித்து வந்தார். இந்நிலையில் டர்ம்ப்புக்கு கொரோனா தொற்று உள்ளது என அறிவிக்கப்பட்டதில் இருந்து கிருஷ்ணா மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் நான்கைந்து நாட்களாக உணவு எதுவும் உட்கொள்ளாமல் டர்ம்புக்காக வேண்டிக்கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று மாரடைப்பு வந்து உயிரிழந்துள்ளார்.