5 வருடங்களாக நீட் எதிர்ப்பு குறித்து பேசாதா மாரி செல்வராஜின் பதிவு.. நெட்டிசன்களின் ரியாக்சன்...
அதிகார அடக்குமுறைக்கு எதிராக எந்த திசையிலிருந்து குரல் எழுந்தாலும், அத்திசைக்கு நம்பிக்கையும் வலிமையையும் சேர்ப்பதே தனது கலையின் நேர்மை என இயக்குநர் மாரிசெல்வராஜ் உறுதியாக தெரிவித்துள்ளார். நீட் எனும் ஆணவ போக்கிற்கு எதிராக தீவிரமாக களமாடும் அனைத்து இந்திய மாணவர்களின் கரங்களையும் தான் பற்றிக் கொள்வதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கல்வித்துறையில் தொடரும் அநீதிகளுக்கும், மாணவர்களின் எதிர்காலத்தைப் பறிக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கலை உலகினர் தங்களது குரல்களை ஒலிக்கத் தொடங்கியிருப்பது தற்போதைய அரசியல் மற்றும் சமூகக் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நீதி மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்டு தனது படைப்புகளை வழங்கி வரும் மாரிசெல்வராஜ், மாணவர்களின் போராட்டத்திற்குத் தனது முழுமையான ஆதரவைத் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சி இருக்கும்போது நீட் தேர்வு குறித்தும், ஆட்சிக்கு எதிராகவும் பேசாத மாரி செல்வராஜ், ஆட்சி மாறியதும் குரல் கொடுப்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
Edited by Siva
