1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் மசாலா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
கத்திரிக்காய் - 1/2 கிலோ 
எண்ணெய் - 50 மில்லி 
கடுகு - 1 டீஸ்பூன்
கருவேப்பிலை - தேவைக்கு ஏற்ப
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 4 
மல்லித்தூள் (தனியா) - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி 
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி 
கொத்தமல்லி - தேவைக்கு ஏற்ப
உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:
 
முதலில் 1/2 கிலோ கத்திரிக்காய் எடுத்து அடிப்பாகத்தில் இரண்டாக கீரி விட்டு கடாயில் 50 மில்லி எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் நாம் வெட்டி வைத்த கத்திரிக்காய் சேர்த்து நன்கு சுருங்கி வரும்வரை வதக்கி எடுக்கவும். 
 
அடுத்ததாக அதே எண்ணெய்யில் 1 டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த உடன் சிறிது கறிவேப்பிலை சேர்க்கவும். அடுத்ததாக 2 நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும் அடுத்து சிறிது நறுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும். 
 
அடுத்ததாக வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு 4 சிறிய தக்காளியை மிக்ஸ்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து சேர்க்கவும் அதனுடன் 1 தேக்கரண்டி மல்லித்தூள் மற்றும் 1 தேக்கரண்டி சீரகத்துள் மற்றும்  தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 
அடுத்ததாக மசாலாவின் பச்சை வாசனை போய் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் போது நாம் பொரித்து வைத்த கத்திரிக்காய் சேர்த்து நன்கு கலந்து விட்டு இறக்கவும். அவ்வளவுதான் பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் மசாலா தயார்.