வியாழன், 12 மார்ச் 2026
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 பிப்ரவரி 2026 (13:17 IST)

இத செய்யலனா கேன்சர் வரும்!.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!...

cancer
மருத்துவத்துறை எவ்வளவு முன்னேற்றம் அடைந்து இருந்தாலும் இன்னும் குணப்படுத்த முடியாத பல நோய்களும் உலகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபற்றி தொடர்ந்து மருத்துவர்களும், மருத்துவ நிபுணர்களும் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தீர்க்க முடியாத நோயாக புற்றுநோய் இருக்கிறது. கேன்சரில் பல வகைகள் இருக்கிறது. அதில் பெரும்பாலான கேன்சர்கள் குணப்படுத்த முடியாததாக இருக்கிறது..

இப்போதெல்லாம் பல காரணங்களால் மக்களுக்கு கேன்சர் நோய் வருகிறது.. இந்நிலையில், உலக சுகாதார நிறுவனம் சில எச்சரிக்கைகளை விடுத்திருக்கிறது. உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கேன்சர் பாதிப்புகளின் முதன்மை காரணங்களாக புகையிலை 15.2 சதவீதமும், மது 3 சதவீதமும் இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மேலும் உடல் பருமன், எந்த வித உடல் இயக்க செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருப்பது போன்ற காரணங்கள் புற்றுநோய் பாதிப்பில் பெரும் பங்காற்றுவதாக எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் புற்றுநோய் பாதிப்பில் 32 சதவீதத்தை வாழ்க்கை முறை மாற்றங்கள், மருத்துவ முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடுகள் மூலம் தவிர்த்திட முடியும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது..