1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
  4. Make Thengai Paal Chicken Kuzhambu in superb taste !!

சூப்பரான சுவையில் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு செய்ய !!

தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு
தேவையான பொருட்கள் :
 
கோழி இறைச்சி - அரை கிலோ
தக்காளி - 3 நறுக்கியது
சின்னவெங்காயம் - அரை கப் நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
காய்ந்த மிளகாய் - 2 நறுக்கியது
சிக்கன் மசாலா தூள் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள், கடுகு - சிறிதளவு
தேங்காய்ப்பால் - அரை டம்ளர்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
 
கோழி இறைச்சியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.
 
அதனுடன் கோழி இறைச்சி துண்டுகளை சேர்த்து கிளறவும். பின்னர் சிக்கன் மசாலா தூள், மஞ்சள் தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.

ஓரளவு வெந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மீண்டும் மூடி வைக்கவும். தேங்காய் பால் நன்கு வற்றி குழம்பு பதத்துக்கு வந்ததும் இறக்கி பரிமாறலாம். சூப்பரான சுவையில் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு தயார். இவை சாதம், இட்லி, தொசை, இடியாப்பத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
பனங்கிழங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?