திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

சுவை மிகுந்த கோவில் புளியோதரை செய்வது எப்படி...?

தேவையான பொருட்கள்:
 
நல்லெண்ணெய் - 1 கப்
 
பொடி தயாரிக்க தேவையான பொருட்கள்: 
 
காய்ந்த மிளகாய் - 6
உளுந்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
எள் - 1 டேபிள் ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 2 டீ ஸ்பூன்
 
வறுக்கவேண்டிய பொருட்கள்:
முந்திரி- 1/2 கப்
வேர்க்கடலை - 1/2 கப்
 
தாளிக்கவேண்டிய பொருட்கள்:
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
உளுந்து - 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு - 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் துாள் - 1 சிட்டிகை
பெருங்காயம் - 1 சிட்டிகை
கருவேப்பிலை - 2 ஈர்க்கு
உப்பு - தேவைக்கு
புளி - 50 கிராம்
பச்சரிசி சாதம் - 2 கப்

செய்முறை:
 
வாணலியை சூடாக்கி, இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
 
இதில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வெந்தயம், தனியா சேர்த்து, வாசனை வரும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்து, எள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, ஆறியதும், பொடித்துக் கொள்ளவும்.
 
வாணலியில் அரை கப் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், முந்திரி பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். முந்திரியை தனியே எடுத்து வைத்து விட்டு, அதே எண்ணெய்யில், வேர்க்கடலையை வறுத்து தனியே வைக்கவும்.
 
அதே வாணலியில், மேலும் நான்கு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, கடுகு சேர்த்து வெடித்ததும், உளுந்து, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம், சிறிது மஞ்சள், பெருங்காயத் துாள் சேர்த்து, புளியை, 200 மில்லி நீரில் கரைத்து ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை வற்ற விடவும்.
 
இதில், வேக வைத்த பச்சரிசி சாதத்தை மிதமான சூடடில், புளி கலவையில் சேர்த்து கலந்து, பொடித்த மசாலா கலந்து, முந்திரி, வேர்க்கடலையை சேர்த்து, பச்சை கறிவேப்பிலை போடவும்.