புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sasikala

சுவையான பால் பாயாசம் செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பால் - 500 லிட்டர் 
ஜவ்வரிசி - 100 கிராம் 
ஏலக்காய் - 5
சேமியா - 100 கிராம் 
சக்கரை - 100 கிராம் 
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 10
திராட்சை - 10
நறுக்கிய பாதம் - 5

செய்முறை:
 
முதலில் ஒரு கிண்ணத்தில் 1/2 லிட்டர் பால் சேர்த்து கொதிக்கவைத்து பால் கொதித்த உடன் 100 கிராம் ஜவ்வரிசி சேர்த்து நன்கு வேகவைக்கவும் ஜவ்வரிசி நன்கு வெந்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை வேகவைக்கவும்.
 
ஜவ்வரிசி வெந்த பிறகு 5 ஏலக்காயை தட்டி சேர்க்கவும். அடுத்ததாக 100 கிராம் சேமியா சேர்த்து சிறிது நேரம் வேகவைக்கவும். சேமியா வெந்த பிறகு 100 கிராம் சக்கரை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
 
அடுத்ததாக ஒரு தாளிப்பு கரண்டியில் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து அதில் 10 முந்திரி மற்றும் 10 திராட்சை மற்றும் 5 நறுக்கிய பாதம் சேர்த்து பொன்னிறமாக வரும்போது பாயாசத்தில் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும். அவ்வளவுதான் அருமையான மற்றும் சுவையான பால் பாயாசம் தயார்.