ஞாபக சக்தியை தரும் வல்லாரை கீரை சட்னி செய்வது எப்படி...?
தேவையான பொருட்கள்:
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 கப் (நறுக்கியது)
வரமிளகாய் - காரத்திற்கேற்ப
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - மூன்று டீஸ்பூன்
புளி -சிறிதளவு
வல்லாரைக் கீரை - 2 கப்
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
பின்னர் வல்லாரைக் கீரையை சுத்தமாக கழுவி அதோடு புளி சிறிதளவு, காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் ஆறவைத்து நைசாக அரைத்தால் அ௫மையான வல்லாரைச் சட்னி தயார். இவை தோசை, இட்லிக்கு சாப்பிட சுவையாக இருக்கும்.
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. ஆரோக்கியம் தந்து, ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரை கீரை சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.