1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
  4. Today india vs bangladesh 2nd T20 match

முத்தரப்பு இரண்டாவது டி20 போட்டி: இந்தியா- வங்காளதேசம் இன்று பலப்பரிட்சை

இந்தியா
இலங்கை கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா- வங்காள தேசம் மோதும் இரண்டாவது நிதாஸ் டிராபி முத்தரப்பு டி20 போட்டி இன்று  நடைபெறுகிறது.

 

இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி  கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
 
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இந்தியா - வங்காளதேசம் மோதும் இரண்டாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்திய அணி இறுதிப்போட்டியில் சிக்கலின்றி செல்ல இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.  
அடுத்த கட்டுரையில்
தமிழ் மொழியை சனியனே என்று கூறியவர் ஈ.வெ.ரா. : மீண்டும் ஹெச்.ராஜா