வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (18:12 IST)

’சர்கார் ’ விளம்பரம்! ஏமாற்றமடைந்த நிர்வாகி...?

சில தினங்களுக்கு முன்பு தான சர்கார் படத்தின் கதை திருட்டு பிரச்சனையில் இயக்குநர் முருகதாஸுக்கும் உதவி இயக்குநர் வருணுக்கும் இடையே சமரசம் காணப்பட்டதால் இனி தீபாவளி வெளியீடாக சர்கார் வெளிவருவதில் எந்த சிக்கலும் வராது என்று கருதப்பட்டது.
இந்நிலையில் சர்கார் படத்தின் விளம்பரத்தில் ஏஜிஎஸ் திரையரங்குளின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக அதன் உரிமையாளர் கல்பாத்தி அர்ச்சனா மன சங்கடம் அடைந்துள்ளார்.
இந்தப் படம் வெளிவரும் தியேட்டர் குறித்த விளம்பரங்கள் தினசரிகளில் மற்றும் இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 
 
இதனையடுத்து தி.நகர், மதுரவாயல், ஓ.எம்.ஆர். போன்ற இடங்களில் உள்ள நவீன வடிவிலான ஒளி, ஒலி திரையரங்குகளான   கல்பாத்தி தியேட்டர்கள் பற்றி சர்கார் விளம்பரங்களில்  இடம் பெறாததால் அங்கு படம் வெளியாகுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்தது.

இந்நிலையில் இதன்  தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கூறும் போது: ’சர்கார் பட விளம்பரத்தில்  மற்ற தியேட்டர்கள் பெயர்கள் மாதிரி கல்பாத்தி பெயரும் இடம்பெறாதது பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.’    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.