1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 நவம்பர் 2018 (13:32 IST)

தீபாவளிக்கு தியேட்டரிலும், வீட்டிலும் வெடிக்க இருக்கும் சர்கார்

தீபாவளியை முன்னிட்டு சர்கார் படம் சோலோவாக ரிலீசாகும் வேளையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு குழந்தைகள் வெடிக்கும் சர்கார் வெடிகளும் மார்கெட்டுக்கு வந்துள்ளன.

சர்கார் திரைப்படம் ஒருவழியாக எல்லாப் பிரச்சனைகளையும் கடந்து ஒருவழியாக தீபாவளி அன்று மிகப் பிரம்மாண்டமான முறையில் வெளியாக இருக்கிறது. 80 நாடுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. வரலாற்றிலேயே முதன்முறையாக ஹவாய் தீவில் வெளியாகும் முதல் தமிழ் படம் சர்கார் தான்.

தீபாவளி அன்று தியேட்டர்களில் பட்டாசாய் வெடிக்க இருக்கிற சர்கார், விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு சந்தோஷமான செய்தியையும் கொண்டு வந்துள்ளது. சர்கார் குறித்த பெருத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளதால் குழந்தைகள் வெடிப்பதற்காக சர்கார் பட்டாசுகள் தயாராகி மார்க்கெட்டுக்கு வந்துள்ளன.

இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.