1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 நவம்பர் 2018 (12:29 IST)

சர்கார் சூறாவளியால் சுருண்டிய விஜய் ஆண்டனி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி  விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி தினத்தன்று நவம்பர் 6ம் தேதி சரவெடியாக வெடிக்கவுள்ளது.
 
திருட்டு கதையில் சிக்கி தவித்த சர்க்கார் ஒருவழியாக அதில் இருந்து மீண்டு பெருமூச்சு விட்டுள்ளது. இந்நிலையில் சர்க்காருக்கு சவால் விட்ட விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் மற்றும் பில்லா பாண்டி போன்ற படங்கள் தீபாவளி தினத்தை குறி வைத்து திரைக்கு வர இருந்தது.
 
ஆனால், தற்போது  விஜய் ஆன்டனியின் திமிரு பிடிச்சவன் படம் அன்றைய தினத்தில் வெளிவந்தால் நிச்சயமாக பிளாப் தான், மேலும் சரியான திரையரங்குகளும் தங்கள் படத்திற்கு கிடைக்காது என்ற பயத்தில் ஆண்டனி படத்தை  வேறொரு தேதிக்கு தள்ளிவைத்துள்ளாராம். . 
 
ஆதலால் வரும் நவம்பர் 16ம் தேதி திமிரு பிடிச்சவன் படம் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என கூறப்படுகிறது.